Siva Astrological Research Bureau, Vellore, Tamilnadu

Friday, August 04, 2006

முகூர்த்த நாள் நிச்சயித்தலின் முக்கியத்துவம்
திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ அதே போலத் தான் முகூர்த்த நாள் நிர்ணயிப்பதும். முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல நாம் செய்யப்போகும் திருமணம் அந்த அளவிற்கு அவர்களின் கணவன் மனைவி பந்தம் தொடரும். சமுதாயத்தில்அவர்கள் வாழ்க்கை சிறக்கும். இருவருக்கும் உள்ள அன்னியோன்யம் குழந்தைப்பேறு முதலிய பல நிகழ்வுகள் நல்லபடியாக அமைவதற்கு முகூர்த்த நாள் மற்றும் நேரம் நிர்ணயம் அவசியமாகிறது. மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் தெரியாமல் போகிறது. நாள் செய்வதை நல்லோரும் செய்யார். நல்லவர்களாலும் செய்ய முடியாததை நல்ல நாள் பார்த்து எந்தவொரு வேலையையும் செய்தோம் என்றால் அந்த வேலையை சிறந்த முறையில் நவக்கிரகங்கள் நமக்கு அமைத்துக் கொடுத்துவிடும். மணமக்கள் இருவர் ஜாதகங் களையும் ஒப்பிட்டுப் பார்த்து இவர்களுக்கு திருமணம் செய்விக்கலாம் என்று ஜோதிடர்கள் தெரிவித்த பின்பு, இருவர் வீட்டில் உள்ள அனைவரும் சம்மதம் தெரிவித்த பின்னர் திருமண முகூர்த்த நாளை தேர்வு செய்ய முற்படவேண்டும். திருமணம் ஒருவருக்கு செய்ய முயலும் போது முதலில் அவரது நட்சத்திரத்தின்படி குருபலம் உள்ளதா என்று அறிய வேண்டும். குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் இருப்பதாக கருதப்படுகிறது. குருபகவான் 2 ல் இருக்கும் போது திருமணம் செய்வித்தால் அந்த தம்பதியருக்கு தனசம்பத்துகள் கிடைக்கும். 5 ல் குரு இருக்கும் போது திருமணம் நடந்தால் சொற்படி நடக்கும் சத்புத்திரர்கள் பிறப்பார்கள். 7ல் குரு இருந்தால் பெண்கள் என்றும் தீர்க்கசுமங்கலியாக இருப்பார்கள். 9ல் இருக்கும்போது கணவருக்கு சகல செல்வாக்கும், 11ல் குரு தங்கும் போது திருமணம் செய்தால் மனைவி அல்லது கணவன் மூலம் செல்வங்கள் பல வந்து சேரும். குருபலம் ஆண் பெண் இருவருக்கும் இருப்பின் மிக்க நலம். இதில் பெண்ணிற்கு மட்டுமாவது இருப்பது இன்றியமையாதது. குருபலம் போலவே சூரிய பலமும் சிறிது முக்கியமாக கருதப்படுகிறது. சூரிய பலம் என்பது ஒருவரின் ஜென்ம ராசிக்கு சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்வதே ஆகும். சூரிய பலம் பெண்ணைவிட ஆணுக்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. திருமணக்காலங்கள் மணமக்களுக்கு யோகாதிபதிகளின் தசாபுக்திகளாக அமைந்தால் அந்தத் திருமணம் சீரும் சிறப்புமாக அமையும். மணமக்கள் இருவருக்கும் குருபலம் இல்லாத சமயத்தில் இவர்களுக்கு சுக்ரன், அல்லது 2, 7, 11 ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம். மணமக்களுக்கு அ~;டம சனி காலத்திலும் விரய சனி நேரத்திலும் திருமணத்தை தள்ளிப்போடுவது சிறப்பை தரும். குருபலம், சூரியபலம், நல்ல தசாபுக்தி மற்றும் சனிபகவானின் தாக்கம் இல்லாத காலங்களை தேர்ந்தெடுத்த பின்னர் ஒரு நல்ல நாளை கீழ்கண்டவாறு தேர்வு செய்யலாம்.
1. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி மற்றும் தை மாதங்ளை தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும் திரயோதசி உள்ள நாட்கள்.
3. இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள நாட்கள்.
4. அன்றைக்கு சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் இருப்பது.
5. இரு கண்ணுள்ள நாட்களான புதன், வியாழன் மற்றும்
வெள்ளிக்கிழமைகள் சிறந்தது. ஒரு கண்ணுள்ள நாட்களான ஞாயிறு
மற்றும் திங்கள் பாதி சிறந்தது. குருட்டு நாட்களான செவ்வாய் சனியை
தவிர்ப்பது உத்தமம்.
6. அக்னி ராசிகளான சிம்மம் மற்றும் மே~ம் முகூர்த்த லக்னமாக இல்லாது
இருப்பது.
7. முகூர்த்த லக்னத்திற்க்கு 7, 8 இடங்கள் திதி சூன்ய ராசிகளாக அமையாமல்
இருப்பது.
8. முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருப்பின் நல்ல கணவன்
மனைவி அமையும். எட்டாம் இடம் சுத்தமாயின் நீடித்த திருமணபந்தம். 12ம்
இடம் சந்தோ~த்தை குறிக்கின்றது. ஆக 2,7,8ம் இடங்கள் சுத்தமாக இருக்க
வேண்டும் மற்றும் எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன்
பார்க்கலாமேவொழிய இந்த இடங்களில் இவர்கள் யாரும்
இருக்கக்கூடாது.
9. உபஜெய ஸ்தானங்களான 3, 6, 11 ல் தீய கிரகங்கள் இருப்பது வாழ்க்கையின்
வெற்றி மற்றும் ஆதாயங்களை குறிக்கும்.
10. திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ, ஜென்ம
கிழமையாகவோ அமையாமல் இருப்பது மிக நல்லது.
11. நவக்கிரகங்களில் அதிக சுபத்தன்மை பொருந்திய குருவும் சுக்ரனும்
மூடம் என்கின்ற அஸ்தங்க தோ~ம் அடைந்திருக்க கூடவே கூடாது. 12. ராகு காலம் மற்றும் ஏமகண்டம் போன்ற வி~நேரங்களை ஒதுக்க
வேண்டும். குளிகை காலத்தைக் கூட தவிர்ப்பது சிறந்தது. காரணம்
குளிகை காலத்தில் செய்யும் காரியங்கள் திரும்பவும் செய்ய
நேரிடலாம்.
13. மொத்தம் உள்ள பதினோறு கரணங்களில் அசுப கரணங்களை
ஒதுக்கவேண்டும். சித்தயோகத்தை மாங்கல்ய தாரணத்திற்கும்
அமிர்தயோகத்தை சாந்தி முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்தல்
வேண்டும்.
14. “பஞ்சகம்” என்ற முறையில் நல்ல நாளை தேர்வு செய்ய வேண்டும்.
பஞ்சக முறையில் பார்த்தால் வருடத்திற்க்கு மிக குறைந்த முகூர்த்த
நாட்களே வரும். எனவே இதற்கு பரிகாரமாக இரத்தினம், சந்தனம்,
எலுமிச்சை, தீபம் மற்றும் தானியம் முதலியவைகளை துணிமணிகளுடன்
சேர்த்து தானம் செய்யவேண்டும்.
15. பெண்ணிற்கு மாதவிலக்குக்கு உரிய நாட்களாக அமையாமல் இருப்பது
அவசியம். ஏனென்றால் இதில் புனிதமான அக்னியை வார்த்து இறைவனை
அதில் வரவழைத்து வணங்குகிறோம்.
16. திருமணம் செய்ய இருக்கும் நாளுக்கு 15 தினங்கள் முன்பு அவரவர் குல
தெய்வத்திற்கு பொங்கலிட்டு ஆராதனைகள் செய்து பிறகு
முன்னோர்களை தியானித்து அனுமதி பெறவேண்டும்.

இப்படி அமையும் திருமண உறவு என்றும் நிலைத்திருப்பதுடன், ஒருவரையொருவர் விட்டுத் தராமல் அன்புடன் இல்லற இன்பம் பெறுவார்கள் என்பது ஜோதிட ரகசியங்களில் ஒன்றாகும்.

(வாசகர்கள் ஜாதகம், ஜோதிடம் சம்பந்தமான கேள்விகளை அனுப்பலாம்)

Saturday, January 21, 2006

ஜாதக பொருத்தம் பார்ப்பது ஏன்?

திருமணம் என்றாலே உடல் மட்டும் அல்ல. மனங்கள் இரண்டும் இரண்டறக் கலப்பதே ஆகும். மனங்கள் கலப்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. நாம் வேலை பார்க்கும் இடத்தில் நமது சக ஊழியர்களில் சிலர் ஒத்துப்போகாவிட்டாலே எவ்வளவு சிரமம் உள்ளது என எல்லோரும் அறிந்ததே. கணவன் மனைவி உறவு என்பது ஆயிரம் காலத்துப் பயிர். அதாவது பயிரை வளர்க்க தேறிய விதைகள் மற்றும் சத்துள்ள நிலமும் இருந்தால் தான் அமோக அறுவடையை எதிர்பார்க்க முடியும். அதேபோலத்தான் இல்லறம் என்கிற பயிரை வளர்க்க ஆணும் பெண்ணும் உண்மையில் தகுதிதானா என அறிய வேண்டும்.

"சம்சாரம் கெட்டால் சன்யாசம்","மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" ஆகிய பழமொழிகள் எந்த அளவு உண்மையானது என்பது மனைவியுடன் வாழும் கணவன்மார்களுக்கு புரியும். ஒருவனுக்கு நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை. அதே பொருத்தம் இல்லாத மனைவியானால் அவன் ஒரு தத்துவ ஞானியாகிறான்.

பெற்றோரும் மாப்பிள்ளையும் பெண்ணைப் பார்த்த உடன் அவள் பணக்காரி, அழகுள்ளவள், படித்தவள், பதவி வகிப்பவள் என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் அவள் பண்புள்ளவளா? அன்புள்ளவளா? என அறிவது எப்படி? அவளுடன் வெகு நாட்கள் பழகிப் பார்த்தால் தான் தெரியும் அல்லவா? இதை நமக்கு தெளிவாக தெரிவிப்பதுதான் அவளது ஜென்ம ஜாதகம்.

ஒருவர் உண்மையான அன்புள்ளவரா என அறிய அவரது ஜாதகத்தை பார்த்தாலொழிய உடனடியாக தெரியாது. திருமணம் நல்ல முறையில் சிறந்து விளங்க ஜாதகப் பொருத்தம் மிக மிக அவசியமாகிறது. சரி, ஜாதகத்தின் மூலம் எப்படி அறிவது என பார்ப்போமா.

ஒருவரது ஜாதகத்தில் 1.2.4.5.7.9.10 இடங்கள் நல்ல முறையில் அமைந்தால் அவர் ஒரு யோகக்காரகர் ஆகிறார்.

ஆணின் ஜாதகத்தில் சூரியன் 3.6.10.11 ம் இடங்களில் இருந்தால் அவனை நம்பி பெண் கொடுக்கலாம். அந்த ஆண் ஆண்மை பொருந்தியவனாகவும், எதிரிகளை வெல்பவனாகவும், நல்ல தொழில் செய்பவனாகவும், லாபம் பெற்ற செல்வ சேர்க்கை உள்ளவனாகவும் இருப்பான்.

ஆண் ஜாதகத்தில் லக்னமும், வீர்ய ஸ்தானமான 3 ம் இடமும் கெடாமல் இருப்பின் அவனது ஆண் தன்மை உடனடியாக நிரூபணமாகிவிடும்.

ஒரு பெண்ணின் லக்னம் மற்றும் ராசி இரட்டைப்படி ராசியான பெண் ராசிகளில் அமைந்தால், அந்தப் பெண் மிகுந்த அன்பும் பண்பும் நிறைந்தவளாக இருப்பாள். ஒரு பெண்ணின் 4ம் ராசியும், 7ம் ராசியும் நன்றாக அமையப்பெற்றால், அவள் கற்புக்கரசியாக விளங்குவாள். பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ம் இடத்தில் சுபகிரகம் இருந்தால் அவள் தீர்க்க சுமங்கலி, அதாவது அவளது கணவருக்கு ஆயுள் பலம் அதிகமாக இருக்கும்.

ஆண் பெண் இருவரின் லக்னங்களும், ஜென்மராசிகளும் சஷ்டாஷ்டகம் பெறக்கூடாது. இருவரின் லக்னங்களும், ஜென்மராசிகளும் நட்பாக அமைந்தால் தம்பதிகள் வள்ளுவர் வாசுகி போல கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.

ஜாதகத்தில் 7ம் அதிபதி, 6ல் இருப்பது நோயுள்ள களத்திரம் அமையும்.
8ல் இருந்தால் தொடர் வியாதியுள்ள களத்திரம் எனலாம்.

7ல் ராகு இருப்பின் மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை பாதிப்புள்ள மனைவி அமைவாள்.
7ம் அதிபதி தீய கிரகங்களுடன் இருந்தாலும், சம்பந்தம் பெற்றாலும், 11ம் அதிபதி வர்க்கோத்தமம் அடைந்தாலும் இரு தார வாய்ப்பை தந்துவிடும்.

ஒருவர் ஜாதகத்தில் சுக்ரன் அதிகமாக வலுக்கவோ கெடவோ கூடாது.

2ம் மற்றும் 7ம் அதிபதிகள் தொடர்புகளும், 7 மற்றும் 9ம் அதிபதிகளின் தொடர்புகளும், சுக்ரன் மற்றும் 9ம் அதிபதிகளின் தொடர்புகளும் அதிர்ஷ்டம் உள்ள கணவன் அல்லது மனைவி வாய்க்கும் அமைப்பாகும்.

7ம் அதிபதி நீச்சம், 7ல் ராகு/கேது, 7ம் அதிபதி 6,8 ல் இருப்பது வரப்போகிற கணவன் அல்லது மனைவியால் பிரயோசனம் அதிகம் இல்லை எனலாம்.

மேற்கண்ட அமைப்புகளை ஜாதகத்தினைப் பார்த்து தெரிந்துக் கொண்ட பின்னர் மணமக்களின் நட்சத்திரங்களைப் பார்த்து பத்து வித தசப் பொருத்தங்களை முடிவு செய்தல் வேண்டும்.


தசப்பொருத்தங்கள்


1.தினப்பொருத்தம்:
மணமக்களின் உடல்நலத்தினை விருத்தி செய்கிறது. இந்த பொருத்தம் இல்லையென்றால் டாக்டர் வீடே கதி என்று இருக்க வேண்டும்.

2.கணப்பொருத்தம்:
மனிதரில் தேவம், மனுஷம், ராட்சஷம் போன்ற குணங்கள் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இந்த பொருத்தம் அமையும் கணவன் மனைவிக்குள் திருப்தி நிலை ஏற்பட்டு அயன, சயன, யோக, பாக்ய என்கிற தாம்பத்ய உறவில் தென்றல் வீசும்.

3.மகேந்திரப்பொருத்தம்:
இப்பொருத்தம் அமையப்பெற்ற தம்பதிகளுக்கு சற்புத்திரர்கள் பிறந்து அவர்களால் பாக்கியம் பெறுவார்கள்.

4.ஸ்திரீ தீர்க்க பொருத்தம்:
பெண்கள் அஷ்ட ஜஸ்வர்யங்களுடன் தீர்க்க சுமங்கலிகளாக வாழ்வார்கள்.

5.யோனிப் பொருத்தம்:
ஆண் பெண் புனிதமான அன்யோன்ய உறவில் என்றும் நறுமணம் கமழ இப் பொருத்தம் அவசியம்.

6.ராசி அதிபதிப் பொருத்தம்:
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவ இது உறுதுணையாக அமைகிறது. இதனால் குடும்ப பிரிவினையை தடுக்க இயலும்.

7.ராசிப் பொருத்தம்:
இருவருக்குள் மாற்றுக்கருத்துக்கள் வராமல் இருக்க இது உதவும்.

8.வசியப் பொருத்தம்:
ஒருவருக்கொருவர் வசியமாதல், அதாவது கணவனோ அல்லது மனைவியோ சிறு சிறு தவறுகள் செய்தாலும் கூட அவர்கள் மீது ஏதோ இனம் புரியாத நெகிழ்ச்சி ஏற்படுத்தும். இது இல்லையென்றால் சக்களத்தி வரவும் வாய்ப்புண்டு.

9.ரட்சுப் பொருத்தம்:
27 நட்சத்திரங்களை சிரசு, கண்டம், உதரம், தொடை, பாதம் என 5 வகையாக பிரித்து ஒரே வகையுள்ள கணவன் மனைவி நட்சத்திரங்கள் பொருந்தாது என அறிவித்துள்ளனர். இப் பொருத்தம் மிக மிக முக்கியம். புருஷன் மற்றும் மனைவிக்கு கண்டங்கள் இன்றி புத்திர சம்பத்துடன், செல்வ நிலையுடன், ஸ்தல யாத்திரைகள் பல செய்து இன்பமுடன் வாழ்வார்கள்.

10.வேதைப்பொருத்தம்:
இப்பொருத்தம் அமையப்பெற்றால் கணவன் மனைவிக்குள் எதிர்மறையான கருத்துக்கள் வராது. இது அமையாத போது கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் என பிரிந்து வாழ்ந்தே பெரும் நாட்கள் கழியும்.

முக்கிய குறிப்பு:
காதல் திருமணம் குரு நிர்ணயித்த திருமணம் தெய்வ வாக்கு அமைத்த திருமணங்கள் கர்ப்பம் நிச்சிதமான திருமணங்களுக்கு பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்விக்கலாம்.

மணமக்களுக்கு ஜாதகப்படியும் நட்சத்திரப்படியும் பொருத்தங்களைப் பார்த்து இறை சிந்தனையுடன் செய்யப்படும் திருமணங்கள் ஆல் போல் தழைத்து அருகு போல் நீடித்து இன்பமுடன் வாழ வழி வகுக்கும்.

சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ

(சேவை மையம்)



சிவமயம்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும்

உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
-தேவாரம்




Write a comment